கிரீஸ், செப்டம்பர் 4 – 1970ஆம் ஆண்டு பிற்பகுதியில் மோர்னோஸ் அணை கட்டப்பட்டபோது, மூழ்கிய கல்லியோ (Kallio) கிராமம், கீரிஸ்சில் நிலவி வரும் வறட்சியில் மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது.
ஏதென்ஸ் தலைநகருக்கு மேற்கே 200 கிலோமீட்டர் தொலைவில் நீர்த்தேக்கத்தை உருவாக்க மோர்னோஸ் அணை கட்டப்பட்டபோது, இந்த கிராமம் நீரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியது.
கிட்டத்தட்ட 80 வீடுகள், தேவாலயம் மற்றும் பள்ளி ஆகியவையும் இந்த நீர்த்தேக்கக் கட்டுமானத்தில் மூழ்கின.
தற்போது ஏதென்ஸ் நகரின் புறநகர்ப் பகதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால், வெப்ப அலைகள் தீவிரமடைந்துள்ளது.
இந்த தீவிர வறண்ட காலநிலை மாற்றத்தால், அந்த ஏரியின் நீர் குறைந்து, மூழ்கிய கிரமம் வெளிப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.