கோலாலம்பூர், டிசம்பர்-17, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையில் நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட நாளொன்றுக்கு 14 விழுக்காடு அதிகரித்து, 2.12 மில்லியனாகப் பதிவாகலமென PLUS Malaysia Bhd கணித்துள்ளது.
டிசம்பர் 20 ஜனவரி 2 வரை அந்நிலை நீடிக்கும்.
எனவே, விடுமுறையில் சொந்த ஊர்களுக்குத் திரும்புபவர்கள், MyPLUS-TTA செயலியில் தாங்கள் வெளியிட்டுள்ள பயண நேர ஆலோசணை அட்டவணைப் பின்பற்றுமாறு PLUS கேட்டுக் கொண்டுள்ளது.
வாகனமோட்டிகள் மோசமான நெரிசலில் சிக்குவத்தைத் தவிர்க்கவும், நெடுஞ்சாலைப் பயணம் சுமூகமாகவும் வசதியாகவும் இருப்பதை உறுதிச் செய்யும் நோக்கிலும், அப்பயண நேர ஆலோசனை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.