Latestமலேசியா

கிள்ளாங்கில் ஆண் சடலம் மீட்பு; கொலை என்று சந்தேகிக்கும் போலீஸ்

கிள்ளாங், செப்டம்பர் 11 – இன்று அதிகாலை கிள்ளாங் காப்பார், ஜாலான் கெம்பாஸ் கிரி, கம்போங் பெரெபட் (Jalan Kempas Kiri, Kampung Perepat) பகுதியிலிருக்கும் சாலையோரத்தில் பல காயங்களுடன் 33 வயது ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

சம்பவ இடத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசாரால் கணிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவரின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்த கூடுதல் தகவல் தெரிந்தவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டுமென்று போலீசார் கேட்டுக் கொண்டனர்.

இதற்கிடையில், நேற்று மாலை முதல் அப்பகுதியில் சாலையோரத்தில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதன் அருகே இன்று அதிகாலை ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் வைரலான பதிவுகள் வெளிவந்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!