
புக்கிட் மெர்தாஜாம், செப்டம்பர் 15 – இன்று அதிகாலை வடக்கு தெற்கு ‘PLUS’ பெர்மாத்தாங் பாவ் (Permatang Pauh) சாலைச் சந்திப்பில், சட்டவிரோத பந்தயம் மற்றும் ‘மாட் ரெம்பிட்’ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 614 சம்மன்கள் வழங்கப்பட்டதுடன், 135 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் மூவர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது முதல் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது.
முன்னதாக இளைஞர்கள் சிலர் இந்தச் சட்டவிரோத பந்தயங்களைப் வேடிக்கை பார்ப்பதற்கு பெர்மாத்தாங் பாவ் சந்திப்பு சாலையில் ஒன்றுக் கூடியிருந்ததை போலீசார் கண்டறிந்திருந்தனர்.
இவ்வாறான அதிவேக பந்தயத்தில் ஈடுபடுவதால் சாலைப் பயனளர்களுக்கு அச்சத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், மோட்டார்சைக்கிள்களின் மாற்றியமைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் (ekzos) மூலம் அதிக சத்தம் எழுப்புதல், எதிர் திசையில் ஓட்டுதல், ‘சிக்ஸாக்’ பாணியில் பயணம் செய்தல், ‘வீலி’ போன்ற ஆபத்தான செயல்கள் போக்குவரத்து பாதுகாப்புக்கு பெரும் அபாயம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.