
பத்து பஹாட், நவ 11 – யொங் பெங் (Yong Peng), ஜாலான் கங்கார் பாரு பாலோ, 6 ஆவது மைலில் அதிவேக இயந்திர ஆற்றலைக் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி மரணம் அடைந்தார்.
மூன்று அதிவேக இயந்திர ஆற்றல் வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கார் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் கழுத்து மற்றும் கடுமையான உட்காயத்திற்கு உள்ளான பாசீர் கூடாங்கைச் சேர்ந்த 64 வயது ஆடவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்ததாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார்.
அதிவேக இயந்திர ஆற்றலைக் கொண்ட மோட்டார் சைக்கிள் அணி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் Segamatடிலிருந்து குளுவாங்கை நோக்கிச் சென்றபோது இவ்விபத்தில் சிக்கினர்.
இரண்டாவது மோட்டார் சைக்கிள் முதலாவது மோட்டார்சைக்கிளில் மோதியதைத் தொடர்ந்து முதலாவது மோட்டார்சைக்கியோட்டி கவிழ்ந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டி முதலாவது மற்றும் இரண்டாவது மோட்டார்சைக்கிள்களின் உடைந்த பாகங்களில் மோதி கீழே விழுந்தார்.
இரண்டாவது மோட்டார் சைக்கிளை ஓட்டிய 58 வயது ஆடவரும் 56 வயதுடைய அவரது மனைவியும் காயம் அடைந்தனர். மேலும் மூன்றாவது மோட்டார் சைக்கிளை ஓட்டிய மற்றொரு 29 வயது ஆடவரும் காயம் அடைந்தார். இந்த விபத்தில் கார் ஓட்டுனரும் உடலின் பல பாகங்களில் சொற்ப காயம் அடைந்தார் என Shahrulanuar கூறினார்.