
சுபாங் ஜெயா, நவம்பர்-9,சிலாங்கூர் பண்டார் சன்வேயில், Bukit Tandang PJS 1 இடுகாட்டுக்கு அருகேயுள்ள கிள்ளான் ஆற்றில் ஓர் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மேல்சட்டை இல்லாமல் ஜீன்ஸ் அணிந்திருந்த அவ்வாடவரிடம் அடையாள ஆவணங்கள் எதுவுமில்லை.
எனினும் உடலில் 4 இடங்களில் பச்சைக் குத்தப்பட்டிருந்தது.
அவற்றில் ஒன்று நட்சத்திர வடிவிலும், இன்னொன்று கத்தி வடிவிலும் இருந்த வேளை, மற்றொன்று ‘No Money No Honey’ என எழுதப்பட்டிருந்ததாக போலீஸ் கூறியது.
மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
எனவே தகவல் தெரிந்தால் போலீசைத் தொடர்புகொண்டு உதவுமாறு சுற்று வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.