
பூச்சோங், ஜூலை-29- நேற்று காலை, பூச்சோங், Jalan Jurutera அருகே உள்ள கிள்ளான் ஆற்று பாலத்தின் கீழ் பாறைகளில் ஓர் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் குப்புறக் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அப்பெண் உடல் முழுவதும் கருப்பு நிற உடையணிந்திருந்ததாகவும், அடையாள ஆவணங்கள் அல்லது தனிப்பட்ட உடைமைகள் எதுவும் காணப்படவில்லை என்றும், சுபாங் ஜெயா போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் (Wan Azlan Wan Mamat) கூறினார்.
நண்பகல் சுமார் ஒரு மணிக்கு போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தடயவியல் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
சடலத்தின் நிலையைப் பார்க்கும் போது, 24 மணி நேரங்களாக அது ஆற்றில் இருந்திருக்கக் கூடுமென வான் அஸ்லான் சொன்னார். சவப்பரிசோதனைக்காக சடலம் செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.