
ஷா ஆலாம், டிசம்பர்-18 – கிள்ளான், தாமான் செந்தோசாவில் நேற்றிரவு நிகழ்ந்த சண்டையில் ஓர் இந்திய ஆடவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் உடனடி விசாரணையில் இறங்கினர்.
அதில், இறந்தவர் 34 வயது உள்ளூர் ஆடவர் என அடையாளம் காணப்பட்டது.
கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் அறிக்கையொன்றில் கூறினார்.
தகவல் தெரிந்தோர் போலீஸை தொடர்புகொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
அவ்வாடவர் வெட்டிக் கொல்லப்பட்டு சாலையோரமாக இரத்த வெள்ளத்தில் கிடக்கும் வீடியோக்கள் முன்னதாக வைரலாகின.



