
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11- மறைந்த சாரா கைரினா மகாதீர் தொடர்பான வழக்கில் எந்தவொரு தரப்பினரையும் கல்வி அமைச்சு பாதுகாக்காது என்று துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ உறுதியளித்துள்ளார்.
பள்ளிகளில் ஒழுங்கு மீறல் மற்றும் பகடிவத்தைச் சம்பவங்களைக் கையாள்வதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் அமைச்சிடம் இருக்கின்றதென்றும், இத்தகைய பிரச்சினைகளில் அமைச்சு ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சாரா கைரினா வழக்கு தற்போது போலீஸ் விசாரணையில் உள்ள நிலையில் விசாரணையை நடத்தும் பொறுப்பை கல்வி அமைச்சு முழுமையாக காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் மலேசிய காவல்துறையினருடன் இணைந்து (PDRM) முழுமையான ஒத்துழைப்பை வழங்க கல்வி அமைச்சு தயாராக இருப்பதாக துணை அமைச்சர் தெரிவித்தார்.