
ஈப்போ, அக்டோபர்-11,
குடிநுழைவுத் துறை அதிகாரிக்குப் பத்தாயிரம் ரிங்கிட் லஞ்சம் கொடுத்த குற்றத்தை ஒப்புக் கொண்ட நாசி கண்டார் உணவக நடத்துநருக்கு, ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம் முப்பதாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
அபராதத்தைச் செலுத்தா விட்டால் 37 வயது வங்காளதேசியான Rezaul Shajahan Ali-யை, 3 மாதங்கள் சிறையில் அடைக்குமாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.
அவர் லஞ்சமாகக் கொடுத்த பத்தாயிரம் ரிங்கிட் பணமும் திருப்பி ஒப்படைக்கப்படாது; மாறாக அரசுடைமையாக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
செப்டம்பர் 12-ஆம் தேதி பேராக் குடிநுழைவுத் துறை அலுவலகத்தில் வைத்து அக்குற்றத்தைப் புரிந்ததாக அந்த வங்காளதேசி குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
முறையான பயணம் பத்திரம் இல்லாதது, அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக நாட்கள் தங்கியிருந்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 13 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதிருக்க, அவர் லஞ்சம் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.