
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 9 – ஆண்டுதோறும் சாதனையாளர்களைக் கெளரவிக்கும் தேசம் ஊடகத்தின் முயற்சியாக, இந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி MAHSA பல்கலைக்கழகத்தில் அனைத்துலக தேசம் ஐகோன் விருது விழா நடைபெறவிருக்கிறது.
15ஆம் ஆண்டு நிறைவை வெற்றிகரமாக எட்டியுள்ள தேசம் ஊடகம், இந்த விழாவில் மொத்தம் 60 பேருக்கு விருதுகளை வழங்கவுள்ளதாக அதன் தோற்றுநர் குணாளன் மணியம் கூறினார்.
இந்த விருதுகள் ஊடகம், கலைத்துறை, விளையாட்டு, அரசியல், வாழ்நாள் சாதனையாளர் ஆகிய பல பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்றார் அவர்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
சந்தன கடத்தல் வீரப்பனை காட்டில் நேரடியாகச் சந்தித்து பேட்டி எடுத்த நக்கீரின் கோபாலுக்கும் இந்த விழாவில் விருது வழங்கப்படவுள்ளது.