‘குதிரை’ போன்று சவாரி செய்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்; வீடியோ வைரல்

கோலாலம்பூர், டிசம்பர் 30 – சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில், ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது மோட்டாரின் இருக்கையை தட்டிக்கொண்டு, குதிரை சவாரி போல பாய்ந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
அந்த காணொளியில், சம்பந்தப்பட்ட அந்த ஓட்டுநர் முதலில் தனது இருக்கையின் பின்புறத்தை அடித்தது மட்டுமல்லாமல் மோட்டார் சைக்கிளில் பாய்ந்து சென்றுள்ளார். பின்னர் நின்றபடியே வண்டியை ஓட்டும் விதமும் வீடியோவில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் அக்காணொளியின் கீழ் பலரும் பல விதமான கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு சிலர், அந்த ஓட்டுநர் குதிரை சவாரியைப் பின்பற்ற முயன்றுள்ளார் போன்ற நகைச்சுவை கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம் அந்த ஓட்டுநர் ஏதாவது பிரச்சினையில் இருக்கலாம் என்ற விமர்சனமும் பதிவாகியுள்ளது.
மேலும் சம்பவம் நடந்த இடம் மற்றும் நேரம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், பதிவில் கோலாலம்பூர் மற்றும் Sungai Petani ஆகிய இரு இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.



