
கோலாலம்பூர், டிச 11 – குப்பை லோரியில் போடப்பட்ட குப்பைகளுக்கு மத்தியில் ஒரு சிசுவின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது புக்கிட் ஜாலில் வட்டாரத்தை சேர்ந்த குடியிருப்புவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக எட்டு மற்றும் 14 வினாடிகள் கொண்ட இரண்டு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.
குப்பை லாரியில் உள்ள கழிவுக் குவியலில் ஒரு சிசுவின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இன்னும் மனவேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், கழிவுநீரால் நிரம்பியிருந்த குழந்தை, தாயின் வயிற்றில் இருப்பது போல் கரு நிலையில் இருப்பது காணப்பட்டது.
இதனிடையே இச்சம்பவம் குறித்து புகார் கிடைத்ததை Cheras மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Superintendan Chua Kok Lian
உறுதிப்படுத்தினார்.
எனினும் இது குறித்து அவர் மேலும் கருத்துரைக்க மறுத்துவிட்டார்.



