Latestமலேசியா

குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படாமல் நஜீப் -இர்வான் விடுதலை

கோலாலம்பூர், நவ 27 – IPIC எனப்படும் International Petroleum investment company க்கு எதிரான வழக்கில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் Mohd Irwan Serigar குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படாமல் இன்று விடுதலை செய்யப்பட்டனர். தற்போது இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தங்களை விடுவிக்க வேண்டும் என நஜீப் மற்றும் இர்வான் உயர்நீதிமன்றத்தில் செய்து கொண்ட விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி ஜமில் உசேய்ன் ( Jamil Hussin) தெரிவித்தார்.

Abu Dhabi யைச் சேர்ந்த நிறுவனமான IPIC க்கு மொத்தம் 6.6 பில்லியன் ரிங்கிட் செலுத்திய அரசாங்க பணம் சம்பந்தப்பட்ட ஆறு நம்பிக்கை மோசடி குற்றத்தை புரிந்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நஜீப் மற்றும் இர்வான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. தங்களை தற்காத்துக் கொள்வதற்கான முக்கிய ஆவணங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்கத் தவறியதால் தாங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என அவ்விருவரும் மனுவை தாக்கல் செய்திருந்தனர். குற்றவிதிகள் சட்டத்தின் 51 A விதியின் கீழ் தேவைப்படும் ஆவணங்களை சமப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை அரசு தரப்பு பின்பற்றவில்லை என ஜாமில் தெரிவித்தார். நஜீப் மற்றும் இர்வான் ஆகியோர் மீது 2018ஆம் ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டு விட்டது. ஆனால் அது தொடர்பான ஆவணங்கள் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்படாதது வரம்பு மீறிய தாமதமாக இருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!