குளுவாங்கில் ‘Serindit’ கிளி வகைகளை சட்டவிரோதமாக வளர்த்து வந்த நபர் கைது

குளுவாங், ஜோகூர், நவம்பர் 20 – ஜோகூர் குளுவாங்கிலுள்ள காஹாங் பகுதியில், 33 வயது மதிக்கத்தக்க உள்ளூர் நபர், மூன்று ‘burung bayan serindit’ எனப்படும் அரிய சிறிய கிளி வகைகளை சட்டவிரோதமாக வளர்த்ததால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
நேற்று நடைபெற்ற சோதனையின் போது, சந்தேக நபரின் வீட்டில் கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த மூன்று பறவைகளுக்கு, அதிகாரிகளிடம் அந்நபர் எந்தவொரு சட்டபூர்வ ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனைக்குப் பிறகு, சுமார் 700 ரிங்கிட் மதிப்பிலான மூன்று பறவைகளும் அதன் கூண்டுகளுடன் பறிமுதல் செய்யப்பட்டு பின்பு குளுவாங் PERHILITAN அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. அதே வேளை, சந்தேக நபர் மேல் விசாரணைக்காக குளுவாங் போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
‘Serindit’ போன்ற அரியவகை அழகுப் பறவைகளுக்கு அதிக தேவையுள்ளதால், அவை கருப்புச் சந்தையில் உயர்ந்த விலைக்கு விற்கப்படுவதாகவும் PERHILITAN தெரிவித்துள்ளது.



