Latestமலேசியா

குழந்தை காணாமல் போகவில்லை; வெறும் ‘வருமுன் காப்போம்’ பயிற்சி மட்டுமே; தெலுக் இந்தான் மருத்துவமனை விளக்கம்

 

 

தெலுக் இந்தான், டிசம்பர்-12 – பேராக், தெலுக் இந்தான் மருத்துவமனையில் குழந்தை எதுவும் காணாமல் போகவில்லை என, அதன் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

சமூக ஊடகங்களில் பரவிய தகவலில் உண்மை இல்லை.

 

மருத்துவமனையில் நடந்தது “பிங்க் குறியீடு” (Kod Pink) எனப்படும் அவசர தயார்நிலை பயிற்சி மட்டுமே.

 

‘வருமுன் காப்போம்’ பாணியிலான இந்த _simulation_ பயிற்சி காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை முழு பாதுகாப்புடன் நடைபெற்றது.

 

உண்மையான அவசரநிலை ஏற்பட்டால் மருத்துவ ஊழியர்கள் எப்படி விரைவாகவும் திறம்படவும் செயல்படுகிறார்கள் என்பதைச் சோதிப்பதே இந்தப் பயிற்சியின் நோக்கம்.

 

ஆகவே, குழந்தை கடத்தல் அல்லது காணாமல் போன சம்பவம் பற்றிய தகவல்கள் தவறானவை என மருத்துவமனைத் தரப்பு விளக்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!