கிள்ளான், டிச 20 – 11 மாத ஆண் குழந்தையை சித்ரவதை செய்த குற்றச்சாட்டை மழலையர் பள்ளி ஆசிரியை ஒருவர் ஒப்புக்கொண்டார். Puncak Alam மிலுள்ள மழலையர் பள்ளியில் டிசம்பர் 13ஆம்தேதி மாலை மணி 6.15 அளவில் 24 வயதுடைய நுர் சுஹடா ஷாருடின் இக்குற்றத்தை புரிந்ததாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நுருல் மார்டியா முன்னியில் குற்றஞ்சாட்டு கொண்டுவரப்பட்டது. இந்த குற்றச்சாட்டு டிசம்பர் 24ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் என்பதோடு அன்றைய தினம் கோலாசிலாங்கூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
குழந்தையின் கன்னம் மற்றும் காதில் காயம் ஏற்படும் அளவுக்கு திருகியதாக சுஹடாவுக்கு எதிரான குற்றச்சாட்டில் கூறப்பட்டது. குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள்வரை சிறை மற்றும் 50,000 ரிங்கிட்டிற்கும் மேற்போகாத அபராதம் விதிக்கப்படும் அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படும் 2001ஆம் ஆண்டின் சிறார் சட்டத்தின் கீழ் 31 ஆவது விதி உட்பிரிவு (1) (a ) யின் கீழ் நுர் சுஹடா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவருக்கு 10.000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.