குவாந்தான், அக்டோபர்-24 – P-hailing காரில் உணவு ஆர்டர் செய்த போது தவறான முகவரியை தந்ததால் தனது மனைவியை கடிந்துகொண்ட Grab ஓட்டுநரை, கணவர் துரத்திச் சென்று தாக்கிய சம்பவம் வைரலாகியுள்ளது.
குவாந்தான், பெர்மாத்தாங் லீமாவ், சுங்கை சோய் எனுமிடத்தில் கடந்த திங்கட்கிழமை அச்சம்பவம் நிகழ்ந்தது.
Grab Food ஆர்டர் செய்த அப்பெண் தவறுதலாக வீட்டிலிருந்து சற்று தொலைவான இடத்தைத் தேர்ந்தெடுத்து விட்டார்.
பின்னர் WhatsApp வாயிலாக ஓட்டுநருக்கு அது குறித்து தெரிவித்துள்ளார்.
தவறான முகவரியால் ஒரு பெரிய சுற்று வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட Grab ஓட்டுநர், அப்பெண்ணின் வீட்டை அடைந்ததும் அவரை கடிந்துகொண்டார்.
அப்பெண்ணோ, வழக்கமாக தான் தேர்ந்தெடுக்கும் முகவரி தான் அதுவென தர்க்கம் செய்ய, Grab ஓட்டுநர் எதற்கு வீண் பிரச்னை என அங்கிருந்து கிளம்பத் தயாரானார்.
திடீரென ஆவேசத்தில் அப்பெண்ணின் கணவர் சத்தம் போட்டதால், பயத்தில் Grab ஓட்டுநர் உடனடியாக கிளம்பிச் சென்னார்.
ஆனால் Tiger என பட்டப் பெயரையுடைய அந்த வாட்டசாட்டமான ஆள், காரால் துரத்திச் சென்று அந்த Grab மோட்டார் சைக்கிளோட்டியை மோதித் தள்ளினார்.
பின்னர் அவரைத் தாக்கியும் உள்ளார்.
அதனை வீடியோ எடுத்ததால் மேலும் சினமடைந்த ‘Tiger’, வீடியோவை அழிக்குமாறுக் கூறி Grab ஓட்டுநரின் கழுத்தையும் நெறுக்கியதாக ய் கூறப்படுகிறது.
குவாந்தான் போலீஸ் அச்சம்பவத்தை விசாரித்து வருகிறது.