அலோர் ஸ்டார், செப்டம்பர் 19 – பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்தைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி வரை, குவாலா கெடா பயணிகள் முனையத்திலிருந்து, ஃபெரி படகுச் சேவைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இன்று குவாலா கெடாவிற்கும், லங்காவிற்குமான 10 ஃபெரி சேவைகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 17ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி வரை ரத்து செய்யப்பட்ட இச்சேவையினால், 12,532 பயணிகள் பாதிக்கப்படவுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதனிடையே இதில் பாதிக்கப்பட்ட பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறலாம் அல்லது பயணத் திகதிகளை மாற்றி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
குவாலா கெடா பயணிகளின் முனையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், வானிலை சீராகும் வரை குவாலா பெர்லிஸ் பயணிகள் முனையம் வழியாக பாதைகளை மாற்றுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.