
குவாலா சிலாங்கூர், செப்டம்பர்-3 – ஞாயிற்றுக்கிழமை குவாலா சிலாங்கூர் கோயில் திருவிழாவின் போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஆடவர் கைதாகியுள்ளார்.
பெஸ்தாரி ஜெயா, புக்கிட் பாடோங் தோட்டத்தில் அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
கோயிலுக்கு வெளியே வழிபாட்டின் போது அவ்வாடவர் வானை நோக்கி சில முறை துப்பாக்கிச் சூட்டை கிளப்பினார்.
சம்பவ வீடியோ வைரலாகி, போலீஸிலும் புகார் செய்யப்பட்டு அந்நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்த நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் அவர் கைதானார்.
அவர் 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டதை மாவட்ட போலீஸ் தலைவர் Azaharudin Tajudin உறுதிப்படுத்தினார்.
அனுமதிப் பெறாமல் சுடும் ஆயுதங்கள் மூலம் வேட்டுச் சத்தம் கிளப்பியதன் தொடர்பில் அந்நபர் விசாரிக்கப்படுகிறார்.