
குவாலா திரங்கானு, ஜூலை-17- குவாலா திரங்கானுவில் நேற்றிரவு 4 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
ஒரு பேருந்து, Proton Exora, Proton Persona, Honda Civic ஆகியவே அந்நான்கு வாகனங்களாகும்.
Honda Civic கார் கவிழ்ந்து எதிர்திசையில் புகுந்து Proton Exora காருடன் மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதனால் சாலையில் சுற்றிய Proton Exora காரை Proton Persona கார் பக்கவாட்டில் மோதியது; கடைசியாக வலப்புறத்தில் பேருந்தும் மோதியது.
இதையடுத்து Proton Exora மற்றும் Honda Civic கார்களின் ஓட்டுநர்கள் சிகிச்சைக்காக, சுல்தானா நூர் சஹிரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.