குவாலா திரெங்கானுவில் தீ விபத்து; மயிரிலையில் உயிர் தப்பிய 9 பேர்

திரெங்கானு, ஜனவரி 10 – குவாலா தெரெங்கானுவில் உள்ள Kampung Kubang Buyong, Chabang Tiga பகுதியில், நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இதில் இரண்டு மாத குழந்தை உட்பட ஒன்பது பேர் பாதுகாப்பாக உயிர்தப்பினர்.
வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததே தீ விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தீயில் இரண்டு வீடுகள் 80 விழுக்காடு சேதமடைந்ததுடன், மற்றொரு வீடு பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்தவுடனேயே குவாலா திரெங்கானு மற்றும் ஜாலான் கோத்தா தீயணைப்பு நிலையங்களில் இருந்து 20 வீரர்கள் மற்றும் மூன்று வாகனங்கள் விரைந்து வந்து, சுமார்
ஒரு மணி நேரத்திலேயே தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றாலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



