
அம்பாங், அக்டோபர்-17 – அம்பாங் ஜெயா, தாமான் மெலாவாத்தி, E6 சாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் நில அமைப்பு சீரடைந்துள்ளது.
புதிதாக மண் அசைவு எதுவும் கண்டறியப்படவில்லையென, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் (Datuk Hussein Omar Khan) தெரிவித்தார்.
அப்பகுதியில் வலுவற்ற நிலையிலுள்ள சில மரங்களை வெட்ட வேண்டியுள்ளது மட்டுமே எஞ்சியிருப்பதாக அவர் சொன்னார்.
மற்றபடி, சம்பந்தப்பட்ட தரப்புகள் அவ்வப்போது அங்குள்ள நிலைமையைக் கண்காணித்து வருமென, சம்பவ இடத்தை இன்று காலை சென்று பார்வையிட்ட போது டத்தோ ஹுசேய்ன் கூறினார்.
நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கி பெய்த கனமழையால் தாமான் மெலாவத்தியில் 30 மீட்டர் ஆழத்திற்கு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் 21 வீடுகளுக்கான முக்கியப் பாதைத் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.