
குவா முசாங், டிசம்பர் 4 – கிளந்தான் குவா மூசாங்–லோஜிங் சாலையின் 45 வது கிலோமீட்டரில் ஏற்பட்ட நிலச்சரிவை முன்னிட்டு அப்பகுதி சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தபோதும், சிலர் இன்னும் ஆபத்தான அந்தச் சாலையை பயன்படுத்தி வருவது கண்டிக்கத்தக்க கூடிய ஒன்றாகும்.
அவ்வாறு விதிகளை மீறி அப்பாதையில் பயணிக்கும் ஓட்டுனர்கள் மீது போக்குவரத்து சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென்று குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர், Superintendan Sik Choon Foo எச்சரித்துள்ளார்.
அந்த இடத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகமுள்ளதால் பொதுமக்கள் நிச்சயம் பாதிக்கப்பட்ட சாலையை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட அமைப்புகள் இணைந்து சாலை கண்காணிப்பை வலுப்படுத்தி வருவதோடு, SK Pos Brooke மற்றும் SK Hendrop பள்ளி ஆசிரியர்கள், SK Blau பள்ளியில் தற்காலிகமாக பணியில் அமர்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



