Latestமலேசியா

கூடுதலாகச் செலுத்தப்பட்ட வரித் தொகை மார்ச் இரண்டாம் வாரம் முதல் திருப்பித் தரப்படும்

புத்ராஜெயா, மார்ச்-7-கூடுதலாகச் செலுத்தப்பட்ட வருமான வரித் தொகைகளை, வரி செலுத்துநர்களிடம் திரும்பி ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மார்ச் இரண்டாம் வாரத்திலிருந்து தொடங்கும்.

கட்டம் கட்டமாக அவரவர் வங்கிக் கணக்குகளில் அத்தொகை செலுத்தப்படும் என, உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN அறிவித்துள்ளது.

இது, 2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை சமர்ப்பித்த தனிநபர்களை உட்படுத்தியது.

e-Filing முறையில் வரி அறிக்கை சமர்ப்பித்தவர்களுக்கு 30 வேலை நாட்களுக்குள் திருப்பித் தொகை வழங்கப்படும்.

அதே சமயம், _manual_ முறையில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 90 வேலை நாட்கள் வரை ஆகலாம் என LHDN கூறியது.

கூடுதல் தொகை திரும்பக் கிடைப்பதில் தாமதம் ஏற்படாமலிருக்க, வரி செலுத்துநர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிச் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!