பெர்லின், டிசம்பர்-21,ஜெர்மனியில் மக்கள் குவிந்திருந்த கிறிஸ்மஸ் சந்தையைக் குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் பெர்லினில் (Berlin)
வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த அச்சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தேவையான கேக், பரிசுபொருட்கள் போன்றவற்றை வாங்கிக் கொண்டிருந்த போது, அதி வேகத்தில் காரொன்று சந்தைக்குள் புகுந்து கூட்டத்தை மோதியது.
இதனால் பலர் தூக்கி வீசப்பட்டனர்.
காரோட்டியை உடனடியாகக் கைதுச் செய்த போலீசார், அவர் 2006-ஆம் ஆண்டிலிருந்து ஜெர்மனியில் வசித்து வரும் 50 வயது மருத்துவர் என அடையாளம் கூறினர்.
சந்தேக நபரின் காரின் பின்னிருக்கையில் பயணப் பெட்டியொன்றும் கண்டெடுக்கப்பட்டது.
எனினும் அதில் வெடிப்பொருட்கள் ஏதும் இருந்ததா என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.
சந்தேக நபர் தனியாளாகத் தாக்குதல் நடத்தியிருப்பதால், தற்போதைக்கு அபாயம் எதுவுமில்லை என போலீஸ் கூறியது.
அச்சம்பவம் குறித்து கடும் அதிர்ச்சித் தெரிவித்த ஜெர்மனி நாட்டின் தலைவர் (Chancellor), மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
சம்பவ இடத்தில் இன்று பின்னேரம் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்மஸ் மரங்களாலும் அலங்கார வண்ண விளக்குகளாகும் பெருநாள் களைக் கட்டியிருந்த அச்சந்தையில், ஒரே வினாடியில் நிலைமைத் தலைக் கீழான துயரக் காட்சிகள் வைரலாகி வலைத்தளங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.