
கூலாய், ஏப்ரல் 23- கூலாயில், நான்காம் படிவ மாணவர் ஒருவர் கைப்பேசியில் ஆபாசப் படங்களை வைத்திருந்தற்காகவும், செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி 17 வயது இளம்பெண்ணின் புகைப்படத்தைத ஆபாசப் படமாக மாற்றிய குற்றச்சாட்டத்திற்காகவும், இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டார்.
இதனிடையே, ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டை மட்டுமே ஒப்புக்கொண்ட அம்மாணவர் மற்றொரு குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவில்லை.
அம்மாணவன் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 4,000 ரிங்கிட் என்ற நிலையில் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்த வேளை, ஜூன் 23 ஆம் திகதி இவ்வழக்கு மீண்டும் மறு செவிமடுப்புக்கு கொண்டு வரப்படும்.