கெடா, செப்டம்பர் 19 – கூலிம் கெடாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், தொடை வரை தண்ணீர் உயர்ந்திருந்தாலும், அங்கு வசிக்கும் கிராம மக்கள், விருந்து உபசரிப்பில் கலந்துக்கொள்வதை தடுக்கவில்லை.
டிக்டோக்கில் வைரலான காணொளியில், கூலிம் Kampung Paya-வை சேர்ந்த மக்கள் வீட்டின் முன் பகுதியில் வெள்ளத்தில் நடந்து கொண்டு அமைதியாகச் சாப்பிடுவதைக் காண முடிகிறது.
வெள்ள நீர் மட்டம் உயர்ந்து கொண்டிருந்தாலும், விருந்தினர்கள் உணவுகளை எடுக்க வரிசையில் நிற்பதையும் பார்க்க முடிகிறது.
வெள்ளத்தில் கூட விருந்துதான் என பதிவேற்றம் செய்யப்பட்ட இக்காணொளி, தற்போது சமூக வலைத்தளவாசிகள் மதியில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.