
சிக் கெடா, செப்டம்பர் 17 – நேற்று கெடா சிக் அருகிலுள்ள லட்டா மெங்குவாங்கில் (Lata Mengkuang) விடுமுறையைக் கழிக்க நண்பர்களுடன் அருவியில் உல்லாசமாக குளித்துக் கொண்டிருந்த 16 வயது மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் கிடைத்தவுடனேயே, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு குழுவினர் உடனடியாக மீட்பு பணி வேளைகளில் ஈடுபட்டனர்.
மயக்கநிலையிலிருந்த அந்த இளைஞரை பொதுமக்கள் கண்டுபிடித்து சுகாதார பணியாளர்களிடம் ஒப்படைத்த பின்னர் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மேல் நடவைடிகைகளுக்காக சிறுவனின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.