
அலோர் ஸ்டார், ஜனவரி 28 – கெடா மாநில சுகாதாரத் துறை, மாநிலம் முழுவதிலுமுள்ள 11 இடங்களில் நடத்திய சோதனையில், 13.4 மில்லியன் ரிங்கிட் பதிவு செய்யப்படாத சுகாதாரப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.
விற்பனை செய்யப்பட்ட பொருட்களில் சட்டத்தால் தடை செய்யப்பட்ட விஷப்பொருட்கள் இருப்பதாக சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநில சுகாதார இயக்குநர் Dr Nor’Aishah Abu Bakar கூறியுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட 227 பொருட்கள், உள்ளூர் தயாரிப்பான சீன பாரம்பரிய மருந்துகள் ஆகும். அதில் steroid, உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களும் கண்டறியப்பட்டன.
மேலும், இந்தப் பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மூன்று டிஜிட்டல் சாதனங்களும், மூன்று உற்பத்தி இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மருந்து விற்பனைச் சட்டத்தின் கீழ் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



