கோலாலம்பூர், ஜன 17 – இன்று கெந்திங் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து வாகனங்கள் செல்லும் இரண்டு சாலைகளில் போக்குவரத்துக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. எனினும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இன்று அதிகாலை மணி 2.47 க்கு நிலச்சரிவு ஏற்பட்டது குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக பெந்தோங் போலீஸ் தலைவர் ஸைஹாம் கஹார் ( Zaiham Kahar ) தெரிவித்தார். இந்த நிலச்சரிவினால் Jalan Amber Court மற்றும் Jalan Ion Delemen னில் அனைத்து போக்குவரத்தும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சொத்துடமைக்கு மட்டுமே சேதம்
ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இடத்தில் தூய்மைப்படுத்தும் பணி இன்று பிற்பகல் 2 மணியளவில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சாலைகள் வாகனங்களுக்கு மீண்டும் திறந்தவிடப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் பொய்யான தகவல்களை பரப்புவதோ அல்லது ஆருடங்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டனர்.