கோலாலம்பூர், செப்டம்பர் 10 – கோலாலம்பூர், கெப்போங்கில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று முதியவர் ஒருவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்திருக்கலாம் என நம்பப்படும் தனது தந்தையான அந்த முதியவரின் எலும்புக்கூடு இருப்பதாக, அவரின் மகன் தகவல் கொடுத்ததாக கெப்போங் காவல் நிலையம் உறுதிப்படுத்தியது.
60 வயது மதிக்கத்தக அந்த முதியவர், விவாகரத்து பெற்று தனித்து வாழ்ந்து வந்த நிலையில், குவார்ட்டர்சில் (kuarter) மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுத்திருக்கிறார்.
முன்னதாக இவர் நீண்ட விடுமுறைக்குக் கிராமத்திற்குத் திரும்ப விருப்பதாக, அண்டை வீட்டாரிடம் கூறியுள்ள நிலையில், அவர் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டார் என்றுதான் அனைவரும் நம்பியுள்ளனர்.
இந்நிலையில், அவர் இறந்து கிடைக்கபெற்ற எலும்புக்கூடு, சுற்று வட்டார மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.