Latestமலேசியா

கெமாமான் சந்தையில் மாற்றுத்திறனாளி தாக்கப்பட்ட சம்பவம்; நால்வர் கைது

கெமாமான், ஜனவரி-20 – திரங்கானு, கெமாமான் விவசாயச் சந்தையில் மாற்றுத்திறனாளி ஒருவர் வியாபாரிகள் என நம்பப்படும் சிலரால் சரமாரியாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நால்வர் கைதாகியுள்ளனர்.

அதோடு வாக்குமூலம் பெறுவதற்காக சம்பவத்தை நேரில் பார்த்த 3 சாட்சிகளும் அழைக்கப்பட்டிருப்பதாக, கெமாமான் மாவட்ட இடைக்கால போலீஸ் தாலைவர் Wan Muhammad Wan Jaafar கூறினார்.

கைதானவர்கள் 18 முதல் 60 வயதிலானவர்கள் ஆவர்.

கலவரத்தில் இறங்கியதன் பேரில் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சம் 50,000 ரிங்கிட் அபராதமும் ஓராண்டு சிறையும் விதிக்கப்படலாம்.

வெள்ளிக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தில், அந்த மாற்றுத்திறனாளி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சந்தையிலிருந்த ஓர் உணவங்காடியை மோதியது.

அதில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீ கோரேங், பானங்கள் உள்ளிட்டவை கீழே விழுந்து சிதறின.

இதனால் ஆத்திரமடைந்த சில ஆடவர்கள் அந்நபரை சரமாரியாகத் தாக்கியனர்;

மாற்றுத்திறனாளி “வலிக்கிறது, மன்னித்து விடுங்கள்” எனக் கதறிய போதும், அவரைத் தரதரவென இழுத்து எட்டி உதைக்கும் வீடியோக்கள் வைரலாகி பதைபதைக்க வைத்தன.

மனநலம் பாதிக்கப்பட்ட அவ்வாடவர் கெமாமான் மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!