Latestமலேசியா

கெமிஞ்சே சீனப் பள்ளியில் சுயநினைவின்றி கிடந்த தலைமையாசிரியை மரணம்

கெமஞ்சே, ஆகஸ்ட்-18 – நெகிரி செம்பிலான் கெமெஞ்சேவில் சீன ஆரம்பப் பள்ளியில் நேற்று சுயநினைவின்றி கிடந்த தலைமையாசிரியை, மரணமடைந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

44 வயது மதிக்கத்தக்க அம்மாது, சம்பவத்திற்கு முன்பாக பள்ளியில் நடைபெற்ற தொழில்முனைவோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார்.

உடல்நலம் சரியில்லாததால் பின்னர் தனது அலுவலக அறையில் அவர் ஓய்வெடுக்கச் சென்றார்.

ஆனால் காலை 9 மணியளவில் அவர் சுயநினைவின்றி கிடந்ததை கண்டு சக ஆசிரியர் கண்டு மற்றவர்களுக்கும் தகவல் கொடுக்க, அவர் கெமஞ்சே கிளினிக் கொண்டுச் செல்லப்பட்டார்.

எனினும், அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இவ்வேளையில், சவப்பரிசோதனை முடிந்ததும், அச்சம்பவம் குறித்து போலீஸ் அறிக்கை வெளியிடுமென தம்பின் போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!