
கெர்த்தே , டிச 1 – Kerteh அருகே உள்ள Biopolymer தொழில்துறை பகுதியில் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது, வளர்ப்புப் பிராணிகளுக்கான உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஒன்பது தொழிலாளர்கள் நச்சு வாயுவை சுவாசித்ததால் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகினர்.
நேற்று மாலை 6.51 மணிக்கு நடந்த சம்பவத்தில், 23 முதல் 40 வயதுடைய பாதிக்கப்பட்ட அனைவரும் தொழிற்சாலையில் தொட்டி பராமரிப்பு பணிகளை தொடங்கியிருந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தொட்டி மூடியைத் திறந்ததால் சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றி amonia மற்றும் Methyl வாயு வெளியேறியதைச் தொடர்ந்து இச்சம்பவம் நடந்ததாகதாக நம்பப்படுகிறது.
மூச்சு திணறலுக்கு உள்ளான அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டதாக திரெங்கானு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் நடவடிக்கை அதிகாரி Kasyfi Syahmi Ghazali தெரிவித்தார்.
தீயணைப்புத்துறையின் அபாய ரசாயன கட்டுப்பாட்டு பிரிவினர், நச்சு வாயு கசிவை இன்று அதிகாலை மணி 1.05 அளவில் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர்.
அதே வேளையில் dungun மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் மூவர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
இதர ஆறு தொழிலாளர்கள் இன்னும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு அவர்களின் நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



