
கேமரன் மலை , ஜன 13 – தற்போது பலத்த காற்று காற்று வீசும் காலத்தில் மரங்களுக்கு அருகில் நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் நடமாடுவதை தவிர்க்குமாறு கேமரன்மலை சுற்றுப் பயணிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியில் இருக்கும்போது தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை பின்பற்றும்படி கேமரன்மலை மாவட்ட மன்றம் இன்று முகநூல் பதிவில் கேட்டுக்கொண்டது. கேமரன் மலைக்கு பயணத்தைத் திட்டமிடுபவர்கள் எப்போதும் தங்கள் சொந்த மற்றும் தங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நிழலான மரங்களுக்கு அருகில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதோடு தற்போது கடுமையாக காற்று வீசும் காலநிலைக்கு மத்தியில் பலத்த காற்றினால் விரும்பத்தகாத சம்பவங்களை இது தடுக்கும். ஜனவரி 9 ஆம்தேதி ஏற்பட்ட நிலச்சரிவினால் கேமரன் மலையில்Taman Eko Rimba Mossy காட்டுவளப் பகுதி தற்காலிகமாக சுற்றுற்பயணிகளுக்கு மூடப்பட்டது. மேலும் கேமரன் மலையில் Gunung Irau வில் நடைபயண நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பஹாங் காட்டுவளப் பகுதி அறிவித்திருந்தது.