
குவந்தான், ஜன 7 – கேமரன் மலையில் காய்கறி தோட்டத்தைச் சேர்ந்த வங்காளதேச தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் மோட்டார் சைக்கிள் ரோந்து பிரிவைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கு 100 ரிங்கிட் லஞ்சம் வழங்க முன்வந்த குற்றத்திற்காக 2 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிபதி சஸ்லினா சபி ( Sazlina Safie ) முன்னிலையில் வங்காளதேச மொழிபெயர்ப்பாளர் மூலம் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், 25 வயதான மொபரோக் இஸ்லாம் ( Mobarok Islam ) என்ற இளைஞர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இரவு மணி 8.20 அளவில் காய்கறி கடைக்கு முன்னால் உள்ள பிரதான சாலையில் அந்த நபர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.
உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக தம்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்காக, பிரிஞ்சாங் (Brinchang) போலீஸ் நிலையத்தின் lance corporal பதவியில் இருந்த போலீஸ் அதிகாரிக்கு அவர் 100 ரிங்கிட் லஞ்சம் வழங்கியதாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று முதல் இரண்டு மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி அந்த இளைஞருக்கு நீதிபதி Sazlina உத்தரவிட்டார்.



