கேரளாவில் கொடூரம்; படுக்கையை நனைத்த 5 வயது சிறுமியின் பிறப்பிறுப்பில் கரண்டியால் சூடு வைத்த மாற்றான் தாய்

பாலக்காடு, ஜனவரி-10,
இந்தியா, கேரளாவில் அதிர்ச்சியூட்டும் குழந்தை சித்ரவதை சம்பவமொன்று வெளிச்சத்துக்கு வந்து கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது.
பாலக்காடு மாவட்டத்தில், 5 வயது சிறுமியின் பிறப்புறுப்பில் இரும்பு கரண்டியால் சூடு வைத்ததற்காக, மாற்றான் தாய் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
இரவில் படுக்கையிலேயே குழந்தை சிறுநீர் கழித்ததற்கு தண்டனையாக அம்மாது இக்கொடூரச் செயலை செய்ததாக போலீஸார் கூறினர்.
பாலர் வகுப்பில் அமர முடியாமல் அக்குழந்தை தவித்ததை கவனித்த ஆசிரியை சந்தேகத்தில் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்தே போலீஸார் விசாரணையில் இறங்கினர்.
கைதான மாது பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்; குழந்தையின் தந்தையோ உள்ளூர் ஹோட்டலில் வேலை செய்யும் நேப்பாள நாட்டவர் ஆவார்.
பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது சிறார் காப்பகத்தில் குழந்தைகள் நலக் குழுவின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.



