
கோலாலம்பூர், நவம்பர்-20 – கேளிக்கை மையங்களில் வாடிக்கையாளர்களை ‘கவனிக்கும்’ வெளிநாட்டு GRO பெண்கள், தலைக்கு 500 ரிங்கிட் வரை tips பெற்று வருவது தெரிய வந்துள்ளது.
தலைநகர் ஸ்ரீ ஹர்த்தாமாஸில் உள்ள கேளிக்கை மையமொன்றில் திங்கட்கிழமை இரவு குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில், அது கண்டறியப்பட்டது.
அதிகாரிகளைக் கண்டதும் ஓடி கழிவறையில் ஒளிந்துகொண்டாலும், அவர்களால் தப்ப முடியவில்லை.
அதில் 15 கள்ளக்குடியேறிகளும் ஓர் உள்ளூர் ஆடவரும் கைதாகினர்.
அந்த 15 பேரில் 14 பேர் இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் வங்காளதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த GRO பெண்கள் ஆவர்.
இன்னொருவர் கேளிக்கை மைய ஊழியரான வங்காளதேச ஆடவர் ஆவார்.
வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் திறமையைப் பொருத்து 200 முதல் 500 ரிங்கிட் வரை அப்பெண்கள் காசு பார்ப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
சமூக வருகை அட்டையைத் தவறாகப் பயன்படுத்தியது, நுழைவு நிபந்தனையை மீறியது உள்ளிட்ட குற்றங்களும் பதிவாகின.
இதையடுத்து விசாரணைக்காக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறைத் தடுப்பு முகாமுக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர்.



