
கோலாலம்பூர், ஜூலை 28 – அண்மையில் KLCC-யில் எழுந்த பல்வேறு விவகாரங்களைக் தீர்க்க, கோலாலம்பூர் அதிரடிப் படையான ( KL Strike force ) நேற்று நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கையில் கிட்டத்தட்ட 30 தெரு புகைப்படக் கலைஞர்களுக்கு குற்றப்பதிவு எனப்படும் Kompaun வழங்கப்பட்டது.
புகைப்படக் கலைஞர்களில் ஒருவர் ஒத்துழைக்க மறுத்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டாலும், அந்த இடத்தில் இருந்த அதிகாரிகளால் நிலைமை நிபுணத்துவ ரீதியாகக் கட்டுப்படுத்தப்பட்டு, எல்லாம் சுமூகமாக நடந்தது.
புகைப்படம் எடுத்தல் சேவைகளை வழங்கிய குற்றத்திற்காக குற்றப்பதிவு வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதுவே முதல் முறை என்று அடையாளம் கூறவிரும்பதாத தெரு புகைப்படக் கலைஞர் ஒருவர் கூறினார்.
அதிகாரிகளின் அனுமதியின்றி KLCC-யைச் சுற்றியுள்ள பார்வையாளர்களுக்கு பொது இடங்களில் விவேக கை தொலைபேசிகளை பயன்படுத்தி புகைப்பட சேவைகளை வழங்கியது குற்றம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது என தங்களுக்கு வழங்கப்பட்ட குற்றப்பதிவில் 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது எந்த வகையில் நியாயம் என்பதோடு தினசரி சம்மன் வழங்கப்பட்டால் எப்படி இந்த தொகையை செலுத்துவது புகைப்பட கலைஞர் ஒருவர் வினவினார். இரவு 9 மணியளவில் தொடங்கிய இந்த நடவடிக்கையில் போலீஸ், மலேசிய குடிநுழைவுத்துறை மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது கோலாலம்பூர் குடிநுழைவு இயக்குநர் வான் முகமட் சௌபி வான் யூசோப் ( Wan Mohammed Saupee Wan Yusoff) உடனிருந்தார்.