
கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 – தமிழ் சூப்பர் ஹிட் படமான ‘கைதி’ மலாயில் remake செய்யப்பட்டு ‘பண்டுவான்’ (Banduan) என்ற பெயரில் விரைவில் மலேசியாவில் வெளியாக உள்ளது.
தமிழில் அப்படத்தில் நடிகர் கார்த்தி ஏற்று நடித்த ‘டில்லி’ எனும் கதாபாத்திரம் மாலாயில் ‘டாலி’ எனும் பெயரில் இடம்பெறவுள்ளது.
அக்கதாபாத்திரத்தில் பிரபல மலாய் நடிகர் டத்தோ ஆரோன் அசீஸ் (Dato Aaron Aziz) ஏற்று நடிக்கவுள்ளார்.
க்ரோல் அஸ்ரி (Kroll Azry) இயக்கத்தில் வெளியாகவுள்ள இத்திரைப்படம், NTOM மற்றும் Dream Warrior Pictures Sdn. Bhd. இணை தயாரிப்பில் உருவாகி வருகின்றது.
வரும் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த படம், மலேசிய அதிரடி சினிமாவின் தரத்தை உயர்த்தும் எனக் நம்பப்படுகிறது.
கைதி படத்தில் சிறையிலிருந்து வெளியே வரும் கதாநாயகன் பிரியாணியைச் சாப்பிடும் காட்சி மக்கள் மத்தியில் பிரபலம்.
இதனிடையே, மலாய் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்தில் டத்தோ ஆரோன் பிரியாணிக்கு பதிலாக நாசி கண்டாரைச் சாப்பிடுவாரா, நாசி லெமாவை சாப்பிடுவாரா, Tom Yamமை சாப்பிடுவாரா அல்லது Nasi Goreng கம்போங்கை சாப்பிடுவாரா என்ற விவாதம் நெட்டிசன் மத்தியில் இப்போது ஓடிக் கொண்டிருக்கின்றது.
உயிர் பிழைப்பு, தியாகம், மீட்சியுடன் கூடிய பரபரப்பான பயணத்தை இப்படம் வெளிப்படுத்துவதோடு மிகுந்த அதிரடி மற்றும் உணர்ச்சி நெருக்கடியுடன் உருவாகும் பண்டுவான், மலேசிய மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.