Latestமலேசியா

கையும் களவுமாகப் பிடிபட்ட திருடன்: RM1.8 மில்லியன் மதிப்புள்ள அரிய வகை முதலைகள் மற்றும் ஆமைகளைக் கடத்திய வெளிநாட்டு ஆடவன்

கோலாலம்பூர், செப்டம்பர் 18 – 1.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அரியவகை முதலைகள் மற்றும் ஆமைகளைக் கடத்தி வந்த, வெளிநாட்டு ஆடவனைக், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

30 julung-julung குட்டி முதலைகள் மற்றும் 14 indian eye ஆமைகளையும் அந்த ஆடவனிடமிருந்து கைப்பற்றியதாக புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறையின் இயக்குநர் டத்தோ முஹம்மட் யூசப் மாமாட் (Datuk Mohd Yusoff Mamat) கூறினார்.

தெற்காசியாவில் உள்ள ஒரு நாட்டிலிருந்து இந்த கட்டுப்படுத்தப்பட்ட அரியவகை வனவிலங்கு இனங்களை அவன் கடத்தி வந்திருக்கிறான்.

முதற்கட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட இந்த விலங்குகளின் மதிப்பும் தேவையும் அதிகம் எனத் தெரியவந்துள்ளது.

ஒரு முதலை குட்டியின் விலை 60,000 ரிங்கிட்டும், ஒரு Indian eye ஆமையின் விலை 1,350 ரிங்கிட்டாகுமாம்.

இந்த ஆண்டு முழுவதும் மேற்கொண்ட சோதனைகளில், வழக்கத்திற்கு மாறான பொருட்களைக் கடத்தல் மற்றும் வனவிலங்கு கடத்தல் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக, இதுவரை 384 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!