
கோலாலம்பூர், ஏப்ரல்-29, கோலாலம்பூர், கெப்போங் பாருவில் சீனக் கோயிலாக மாற்றப்பட்டிருந்த 2 மாடி டேரஸ் வீடொன்று நேற்று 100 விழுக்காடு தீக்கிரையானது.
மாலை 5 மணியளவில் ஏற்பட்ட தீ, அருகிலிருந்த வீட்டுக்கும் பரவியது.
தகவல் கிடைத்து வந்து சேர்ந்த தீயணைப்பு – மீட்புப் படையினர் ஒருவழியாகத் தீயை முழுவதுமாக அணைத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயில், பக்கத்து வீடு 30 விழுக்காடு சேதமடைந்தது.
என்றாலும் அச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.
தீ ஏற்பட்டதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக, மஞ்சலாரா தீயணைப்புத் துறை கூறியது