Latestமலேசியா

கொலம்பியாவில் விமான விபத்து 15 பேர் மரணம்

பகோத்தா, நவ 29 – வெனுசுவாலா எல்லைக்கு அருகே மலைப்பகுதியில் நேற்று கொலம்பிய விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 15பேர் மரணம் அடைந்தனர்.

13 பயணிகள் மற்றும் இரண்டு ஊழியர்களை ஏற்றியிருந்த Beechcrarft 1900 விமானம் விபத்துக்குள்ளானதை Bogota வில் அரசாங்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அந்த விமானத்தில் இருந்த அனைவரும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

Cucuta எல்லை நகரிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் உள்நாட்டு நேரப்படி நேற்று மதியம் Ocana நகரில் தரையிறங்குவதற்கு முன் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது.

கிழக்கு அன்டஸ் மலைப்பாங்கான, அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள கொலம்பிய அரசாங்கம் விமானப்படையை அனுப்பியது.

விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள கிராமப்புறப் பகுதியின் சில பகுதிகளும் கொலம்பியாவின் மிகப்பெரிய தீவிரவாத குழுவான தேசிய விடுதலை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!