கோத்தா திங்கி, செப்டம்பர்-26 – ஜோகூர், கோத்தா திங்கி, Taman Sri Saujana பகுதியில் நேற்று பெய்த அடைமழையின் போது கால்வாய் சுவர் சரிந்ததால் குடியிருப்பாளர்கள் பீதியடைந்தனர்.
ஏதோ ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டது; எட்டிப் பார்த்தால் கால்வாய் சுவர் இடிந்து விழுந்ததாக 44 வயது குடும்ப மாது ரொஹானா சுலைமான் (Rohana Sulaiman) கூறினார்.
மண்ணரிப்பு ஏற்பட்டு தங்கள் வீடு தற்போது அபாயத்திலிருப்பதாக அவர் சொன்னார்.
நல்லவேளையாக குடும்ப உறுப்பினர்கள் யாரும் அதில் காயமடையவில்லை.
ஏற்கனவே அங்கு சிறிய அளவில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது; அப்போது அதிகாரிகள் canvas படுதாவைக் கொண்டு அப்பகுதியை மூடினர்.
ஆனால் இப்போது மீண்டும் மழைக்காலமாக இருப்பதால், மேலும் நிலம் ஆட்டங்கண்டு குடும்பத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து வந்து விடுமோ என ரொஹானா கவலை கொள்கிறார்.
முன்னதாக பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கிய அடைமழையால் அங்குள்ள பொழுதுபோக்கு ஏரியிலும் முக்கியச் சாலையிலும் வெள்ளமேற்பட்டது.