Latestமலேசியா

கோத்தா திங்கியில் ஆயுதமேந்தி வீடு புகுந்த ஆடவனுக்கு வலை வீசும் போலீஸ்

கோத்தா திங்கி, ஜனவரி 23 – Jalan Persada 17 பகுதியில் உள்ள Residensi Prima குடியிருப்பில், வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, போலீசார் சந்தேக நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவத்தின் CCTV காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உள்ளூர் ஆடவர் ஒருவர் கடந்த புதன்கிழமை போலீசில் புகாரளித்துள்ளார். இச்சம்பவத்தில் அவருக்கு 1,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent Yusof Othman கூறியுள்ளார்

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, ஆயுதத்துடன் வீட்டிற்குள் புகுந்த நபரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து கூடுதல் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக போலீசாரை அணுக வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!