
கோத்தா திங்கி,செப் 2 – கோத்தா திங்கி, பாசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நற்பண்பு சாதனை விருது விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
அப்பள்ளியில் தேசிய கல்வித் தலைமைத்துவ தொழில்முறை தகுதி பயிற்சி பெற்று வரும் ஜாலான் தாஜூல் தமிழ்ப்பள்ளியின் மாணவர் நலத் துணைத்தலைமையாசிரியர் திருமதி அமுதா சுகுமாறன் முன்னெடுக்கப்பட்ட ஒரு சிறப்பான முயற்சியாக இந்த விழா அமைந்தது.
இந்தச் செயல்திட்டத்திற்கு வற்றாத ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்கிய பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி வீ. புஷ்பலதா மற்றும் இந்த செயல் திட்டத்திற்கு பண உதவி வழங்கிய சுப்ரமணியம் பாலகிருஷ்ணன் ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றும் மாணவர்ளுக்கும்
திருமதி அமுதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த முயற்சியின் மூலம், பள்ளி ஆசிரியர்களும் IdME-இல் மாணவர்களின் நற்பண்புகளைச் சரிவர பதிவுசெய்து கண்காணிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், பள்ளியிலும் பொது இடங்களிலும் மாணவர்களின் நற்பண்பு அதிகரித்துள்ளதைக் கண்கூடாகக் காண முடிந்தது.
கல்வி அமைச்சின் நோக்கத்துடன் ஒருங்கிணைந்த இந்தத் திட்டத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்து உயர்ந்த தரவுகளை வெளிப்படுத்தி இச்செயல்திட்டத்தின் நோக்கத்தை எட்டியிருக்கின்றனர்.
சிறப்பு வருகை புரிந்த டத்தோ ஸ்ரீ குமரன் வடிவேல் அதிகாரப்பூர்வமாக இவ்விழாவைத் திறந்து வைத்ததோடு,மட்டுமில்லாமல், பாசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் மடிகணினியை அன்பளிப்பாக வழங்கினார்.
இந்தப் பங்களிப்பு, மாணவர்கள் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உலகிற்குள் நுழையும் அற்புத வாய்ப்பை வழங்கியுள்ளது.
அதே சமயம், மாணவர்கள் DELIMA தளத்தின் மூலம் கல்வி வளங்களை எளிதில் அணுகக்கூடியதாக உள்ளதால், கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறை இன்னும் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.