
திருச்சி, மார்ச்-25 – கோலாலம்பூரிலிருந்து Air Asia விமானத்தில் தமிழகத்தின் திருச்சி சென்ற பயணியிடம், 2.64 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கஞ்சா வகை போதைப்பொருள் சிக்கியது.
நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு Air Asia-வின் AK 25 விமானத்தில் அப்பயணி
திருச்சிராப்பள்ளி அனைத்துலக விமான நிலையம் வந்திறங்கினார்.
அவரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட சுங்கத் துறை அதிகாரிகள் பயணப் பெட்டியை சோதனையிட்ட போது அதிர்ச்சியடைந்தனர்.
அதில், ஹைட்ரோபோனிக் முறையில் வளர்க்கப்பட்ட 5.155 கிலோ கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மேல் விசாரணைக்காக அவர் உடனடியாகக் கைதுச் செய்யப்பட்டார்.