
கோலாலம்பூர், ஜனவரி-11 – கோலாலம்பூரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில், 24 வயது ஆடவன், ஒரு பெண்ணைத் தாக்கி, பொருட்களை பறித்து, அருவருப்பான செயலைச் செய்ய கட்டாயப்படுத்தினான்.
செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி வாக்கில் ஸ்தாப்பாக், ஆயர் பானாஸ் உணவங்காடி நிலையத்தின் கார் நிறுத்துமிடத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது, உயர் கல்விக் கூட மாணவியான 19 வயது பெண்ணும், அவரின் 20 வயது காதலரும் காருக்குள் அமர்ந்து பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
திடீரென அவர்களை நெருங்கிய சந்தேக நபர், காருக்குள் ‘கசமுசா’ நடப்பதாகக் குற்றம் சாட்டியதோடு, இருவரின் அடையாள அட்டைகளையும் பிடுங்கிக் கொண்டான்.
பிறகு, அருவருப்பானச் செயலொன்றை செய்யுமாறு அப்பெண்ணைக் கட்டாயப்படுத்தி, இருவரின் கைப்பேசியையும் எடுத்துக் கொண்டு ஓடினான்.
பாதிக்கப்பட்ட பெண்ணும் காதலரும் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, சந்தேக நபர் கோத்தா டாமான்சாராவில் வியாழக்கிழமை கைதுச் செய்யப்பட்டான்.
விசாரணைகளுக்காக 14 நாட்கள் அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.



