Latestமலேசியா

கோலாலம்பூரில் 12 சட்டவிரோத குடியேறிகள் கைது

கோலாலம்பூர், செப்டம்பர் 23 –

மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) மற்றும் கோலாலம்பூர் ஊராட்சி மன்றம் (DBKL) இணைந்து தலைநகரைச் சுற்றியுள்ள வணிக பகுதிகளில் நடத்திய சோதனையில், 12 சட்டவிரோத குடியேறிகள் (PATI) கைது செய்யப்பட்டனர்.

பண்டார் ந்தார் மென்ஜலாரா, கெப்பொங் மற்றும் லோரோங் ஹாஜி தாயிப் (Bandar Menjalara, Kepong dan Lorong Haji Taib) பகுதிகளில் மொத்தம் 27 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று கோலாலம்பூர் குடிநுழைவு துறை இயக்குநர் வான் முகமட் சௌபீ வான் யூசுப் (Wan Mohammed Saupee Wan Yusoff) தெரிவித்ததார்.

இச்சோதனையில் கைதானவர்கள் அனைவரும் வங்கதேசம், நேபாளம், இந்தோனேசியா, மற்றும் பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அறியப்படுகின்றது.

இந்நிலையில் இத்தகைய சட்டவிரோத வெளிநாட்டு வியாபாரிகளால் உள்ளூர் வியாபாரிகள் வணிக ரீதியில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று டாங் வாங்ஙி நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 28 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு வேலை வழங்கிய இரண்டு மலேசியர்களும் விசாரணைக்காக பிடிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!